இலங்கைசெய்திகள்

மகிந்த மீது ஆளில்லா விமான தாக்குதல் : பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

5 49
Share

மகிந்த மீது ஆளில்லா விமான தாக்குதல் : பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மீது ஆளில்லா விமானம் தாக்கும் அபாயம் இல்லை என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (26) தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆளில்லா விமான தாக்குதல் ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளதாக மனோஜ் கமகே (Manoj Gamage) கூறியிருந்தார். இப்போது அவரை விசாரிக்க காவல்துறை மா அதிபர் தயாராக உள்ளார்.

ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அந்த ஆளில்லா விமானத் தாக்குதலை எதிர்கொள்ள, மகிந்தவைச் சுற்றியுள்ளவர்கள் போதாது. T56 அந்த ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ஏற்றதல்ல.

மனோஜ் கமகே எதையாவது சொல்லும் போது கவனமாக சொல்லுங்கள், மக்களை திசை திருப்பாதீர்கள், எங்கள் உளவுத்துறைக்குள் ட்ரோன் தாக்குதல் எதுவும் இல்லை. அது எங்கிருந்து வருகிறது என்பதை அவர் சொல்ல வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டிற்குள் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லை என்றால், நாங்கள் மறுபரிசீலனை செய்வோம். நான் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர், நானும் இன்று தனியாகத் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.” என தெரிவித்தார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...