தேசிய மட்டத்தில் முதலிடத்தை பெற்ற யாழ். மாவட்ட செயலகம்
யாழ். மாவட்ட செயலகம் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளது.
அதன்படி ஒன்பதாவது தடவையாக தேசிய விருதிற்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த தேசிய விருது வழங்கும் நிகழ்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்டத்திற்கான தேசிய விருது முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தற்போதைய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான கணபதிப்பிள்ளை மகேசனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தேசிய விருதினை யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு பதிலாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பெற்றுக்கொண்டுள்ளார்.
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளர் ஆகியோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர் .
மேலும் , யாழ். மாவட்ட தேசிய மட்டத்திலான பண சேகரிப்பின் அடிப்படையில் முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே கோப்பாய், சண்டிலிப்பாய், சாவகச்சேரி பிரதேச செயலகங்கள் பெற்றுக்கொண்டன.
குறித்த விருதுகள் அந்தப் பிரதேச செயலக செயலாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு சபையின் தலைவர், பொதுமுகாமையாளர், பிரதிமுகாமையாளர், அரசாங்க அதிபர்கள், முன்னாள் அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச திட்டப்பணிப்பாளர்கள , சமுர்த்திப் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் , மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பித்தக்கது.
Leave a comment