தேசிய அடையாள அட்டை குறித்து வடக்கு மக்களுக்கு அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

தேசிய அடையாள அட்டை குறித்து வடக்கு மக்களுக்கு அறிவிப்பு

Share

தேசிய அடையாள அட்டை குறித்து வடக்கு மக்களுக்கு அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை சேவையின், ஒருநாள் சேவையை வடக்கு மக்கள் குருநாகலையில் பெற்றுகொள்ளலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19.07.2023) சபை ஒத்திவைப்பு வேளைக்கான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறுகையில்,“ வடக்கு மாகாணத்தில் வவுனியா பிரதேச செயலகத்தில் தேசிய அடையாள அட்டை விநியோக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வவுனியாவில் ஆரம்பிக்க பௌதீக வளம் கிடையாது. வடக்கு மாகாணத்தில் ஒரு பிரதேசத்தில் ஒருநாள் சேவை விநியோகத்தை ஆரம்பிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதி பகுதியில் குருநாகல் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை விநியோகம் ஆரம்பிக்கப்படும்.

வடக்கு மாகாணத்தில் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் வரை வடக்கு மாகாண மக்கள் குருநாகல் மாவட்டத்தில் ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

ஒருநாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு வடக்கு மாகாணத்தில் இருந்து 25 சதவீதமானோர் வருகை தரவில்லை. 5 சதவீதத்துக்கும் அதிகமானோர் மாத்திரமே வருகை தருகின்றனர்.

நிறைவடைந்த 06 மாத காலப்பகுதியில் தேசிய ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவை ஊடாக அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு 112,596 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இவற்றில் 4,968 விண்ணப்பங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்தது.”என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...