3 3
இலங்கைசெய்திகள்

என்னை பலிக்கடா ஆக்கி விட்டனர் – யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி

Share

என்னை பலிக்கடா ஆக்கி விட்டனர் – யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி

குற்றம் செய்யாமல் குற்றம் சாட்டப்படுவதால் அண்மைக்காலங்களில் பணியாற்றுவதில் சலிப்புத்தன்மை ஏற்பட்டுள்ளதாக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைTeaching Hospital Jaffna) பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்தில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போது நீங்கள் அது தொடர்பில் எந்த ஒரு கருத்தையும் முன் வைக்கவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு தான் வாய் திறந்தாலே ஊழல் என்று சொல்வதாகவும் எதிர்வரும் நாட்களில்  படிப்படியாக  அதனை பொய் என்று நிரூபிப்பேன் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முள்ளிவாய்க்காலில் இறுதி நாட்களில் காயமடைந்தவர்களில் விடுதலைப்புலிகளின் மேல்நிலைப் போராளிகளை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்று முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதி மூன்று நாட்கள் தனது வாழ்நாளில் மறக்க முடியாத வடு என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
44539899 pakistan
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு!

பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இலங்கை...

sabarimala 2025 11 be56e17ca03c9aed28b89ec1142a3bf0 3x2 1
செய்திகள்இந்தியா

சபரிமலை கோயில் தங்கத் திருட்டு வழக்கு: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட இருவர் கைது!

கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்ற தங்கத் தகடு மற்றும் தங்கக் கவசத் திருட்டு...

1735896199 Police L
செய்திகள்அரசியல்இலங்கை

நாடே ஒன்றாக விசேட நடவடிக்கை: 47,000-க்கும் அதிகமானோர் கைது; 1,000 கிலோவுக்கும் அதிக ‘ஐஸ்’ மீட்பு!

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நாடே ஒன்றாக’ தேசிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ்,...