22 18
இலங்கைசெய்திகள்

மீண்டும் வடக்கிற்கான யாழ்தேவி தொடருந்து சேவை : நாமல் அளித்துள்ள உறுதிமொழி

Share

மீண்டும் வடக்கிற்கான யாழ்தேவி தொடருந்து சேவை : நாமல் அளித்துள்ள உறுதிமொழி

தற்போதைய அரச நிர்வாகத்தின் கீழ் செயற்திறன் இன்மை காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி தொடருந்து சேவைகளை தமது அரசாங்கத்தின் கீழ் மீள ஆரம்பிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa), உறுதியளித்துள்ளார்.

30 வருட கால யுத்தத்தை முடித்த பின்னர் வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து பாதைகளை ராஜபக்ச அரசாங்கம் வெற்றிகரமாக நிறுவியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

30 வருடகால யுத்தத்தை முடித்துக் கொண்டு எமது அரசாங்கம் வடமாகாணத்திற்கான யாழ் தேவி தொடருந்து பாதைகளை வெற்றிகரமாக நிறுவியது.எனினும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்திறன் இன்மையினால் இந்த சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் மாத்தறை முதல் கதிர்காமம் வரையிலான 114 கிலோமீற்றர் நீளமான தொடருந்து பாதையை தாமதமின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...

vegetable
செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக காய்கறி விலைகள் அதிகரிக்கும் அபாயம்: மனிங் சந்தை வர்த்தகர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகக் காய்கறி விலைகள் அதிகரிக்கும் என்று மனிங் சந்தை...

images 2 1
செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி முன்மொழிவு ஆளுநரிடம் கையளிப்பு: ஆசிரியர் ஆளணி சீராக்கம் குறித்து கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகம் மற்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையே இன்று...