5 35 scaled
இலங்கை

அதி தீவிர சிங்கள வாக்குளை மட்டும் நம்பும் நாமல் …! பகிரங்கப்படுத்தும் சுமந்திரன்

Share

அதி தீவிர சிங்கள வாக்குளை மட்டும் நம்பும் நாமல் …! பகிரங்கப்படுத்தும் சுமந்திரன்

அதி தீவிர சிங்கள வாக்குளை பெற்றுக் கொள்வதே நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) நோக்கம் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தல் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், எமது அடிப்படை நிலைப்பாடு வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஆகும்.

மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாகவும், பேசிய விடயங்களையும் கூட்டத்தில் தெரியப்படுத்தினோம்.

சில முன்னேற்றகரமான கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்களது தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னரே எமது இறுதி முடிவு எடுக்கப்படும்.

இதேவேளை, நாமல் ராஜபக்ச என்னுடைய வீட்டிற்கு வந்து சந்தித்து இருந்தார். அவர்களிடம் உள்ள விடயங்களை தெரியப்படுத்தினார்.

அது அதி தீவிர சிங்கள வாக்குளை பெற்றுக் கொள்வதை நோக்கமாக கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தோம்.

தற்போது தெற்கில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைத் தூக்காமல் உள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடினோம் தமிழரசுக் கட்சியின் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 19
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதீத உயர்வு: அவுன்ஸ் ஒன்று 4,700 டொலர்களைக் கடந்தது!

ஈரானுடனான மோதல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

Untitled 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் கௌரவம் காக்கப்பட வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்!

இலங்கையின் மூத்த குடிமக்கள் அனைவரும் தங்களது உரிமைகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்துடன்...

Untitled 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கள்ளச்சாராயச் சுற்றிவளைப்பு: 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவித் தாக்குதலில் காயம்!

நுவரெலியா மாவட்டம், கோட்மலை வேடமுல்ல ரம்பொடை பகுதியில் உள்ள வனக் காப்பகத்திற்குள் இயங்கி வந்த கள்ளச்சாராய...