இலங்கைசெய்திகள்

சர்ச்சையாக உருவெடுத்த நாமலின் சட்டப் பரீட்சை: வழங்கப்பட்ட பதில்

Share
14 20
Share

சர்ச்சையாக உருவெடுத்த நாமலின் சட்டப் பரீட்சை: வழங்கப்பட்ட பதில்

சட்டப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் இயக்கத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷாரவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் போதே நாமல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

11 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சட்ட விசாரணையில் நாமல் ராஜபக்ஷ விசேடமாக நடத்தப்பட்டதாகக் கூறி உரிய முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பரீட்சையின் போது, நாமல் ராஜபக்ச அமரும் போது தனியறையில் இரண்டு சட்டத்தரணிகள் அவருக்கு உதவியதாக துஷார குற்றஞ்சாட்டினார்.

அத்தோடு, இந்த விடயத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்சவின் சட்டப் பட்டம் மோசடியானது என்பது நிரூபிக்கப்பட்டால், பட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் ஜமுனி கமந்த துஷார வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள நாமல், தமக்கு எதிராக முன்வைக்கப்படும் ஏனைய குற்றச்சாட்டுகளைப் போன்று இதுவும் அரசியல் இலாபங்களுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை எனவும் இது இலங்கை சட்டக் கல்லூரியின் நம்பகத்தன்மையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...