எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்

tamilni 23

எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்

எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கிராம சேவை பிரிவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கிளை ஒன்றை ஸ்தாபிக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் உருவாக்கப்பட்ட மொட்டுக்கட்சி கிராமிய அரசியலை வலுப்படுத்தும் வகையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களை நேசிக்கும் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Exit mobile version