அண்மையில் வீசிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்த தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நாட்களில் பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்ததாகவும், அவர்களுக்கு உடனடி நிவாரணம் தேவை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத் தேவைகள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரிடம் தான் சிறப்பு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி கூட்டப்படும் எனச் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.