குற்றவாளிகளை அரசியலுக்குள் புகுத்தியவர்களே ராஜபக்சர்கள்: எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

16 3

ராஜபக்சர்களே தென் மாகாணத்திற்கு திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளையும், போதை பொருட்களையும் அரசியலுக்குள் அதிகம் கொண்டுவந்தவர்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினது சமன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் ஊக்கப்பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர்,

இன்று தென் மாகாணத்தில் போதைப்பொருள் குற்றவாளிகள் தொடராக கைது செய்யப்படுவதும், ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது தென் மாகாணத்தில் அதிகளவு போதைப்பொருள் கைப்பற்றப்படும், ஆயுதங்களின் பாவனை அதிகரிப்பதுமாகவுள்ளது.

இவ்வாறான கோட்பாதர்களை உருவாக்கியவர்கள் யார்? தென் மாகாணத்தில் அரசியலுடன் குற்றங்களை கலந்தவர்கள் ராஜபக்சர்களே.

ஐஸ்லாந்து குமாரின் பின்னால் இருப்பவர் ஜுலம்பிட்டிய அமரே.இவர் பெயர் போன குற்றவாளியாவார்.இவர்களை வைத்துக்கொண்டு தான் தென் மாகாணத்தில் இவர்கள் அரசியல் செய்தார்கள்.

வம்பொட்ட,கஜ்ஜா போன்றோர் தொடர்பில் இரகசியங்கள் வெளிவரும் போது அதனோடு இணைந்த அரசியல்வாதிகளுக்கு வருத்தமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version