தென் கொரியாவுக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துச் சுமுகமான கலந்துரையாடலை மேற்கொள்வதற்காகக் கொரிய தேசிய சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் ஜூ ஹோ-யங்கைச் சந்தித்தார்.
இலங்கையின் மரியாதைக்குரிய பௌத்த துறவியும், நீண்டகால நண்பருமான வண. யியோங்-டாம் லிமின் அழைப்பின் பேரில் ராஜபக்ஷவின் இந்த வருகை அமைந்துள்ளது.
தனது விஜயத்தின் ஒரு பகுதியாக, பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ புச்சியோனில் உள்ள சியோக்வாங்சா விகாரைக்கும் (Seokgwangsa Temple) சென்றார். அங்கு, இலங்கையுடன் நீண்டகால மத மற்றும் கலாசார உறவுகளைப் பேணி வரும் வண. யியோங்-டாம் லிமிடம் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.