தன்னை ஒரு கறைபடியாதவராக காட்ட நாமல் முயற்சி: சாணக்கியன் சாடல்

24 667f7cfe0ff26 34

தன்னை ஒரு கறைபடியாதவராக காட்ட நாமல் முயற்சி: சாணக்கியன் சாடல்

தன்னை ஒரு கறைபடியாதவராக காட்டுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முயற்சிகளை முன்னெடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R. Shanakiyan) குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்படி, தனக்கும் தனது தந்தையான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) குடும்பம் உள்ளிட்ட மொட்டு கட்சிக்கும் தொடர்பு இல்லையென்பதை காட்டும் வகையில் நாமல் ராஜபக்ச செயல்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) அமெரிக்க மிசன் மண்டபத்தில் இன்று (30) மாலை நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “இராணுவ புலனாய்வுத்துறையுடன் செயற்பட்டவர்கள் அவர்கள் செய்த பிழையான செயற்பாடுகளை சொல்வதற்கு தயாராகவுள்ளதாக கூறியுள்ள நிலையிலும், இதுவரையில் அது தொடர்பில் விசாரணை செய்யப்படவில்லை.

பிள்ளையானிடம் ஜேவிபியினர் ஆயுதம் கேட்கின்றார்கள் என்றால் சமையலறையில் வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தவரிடம் கத்தி எதனையும் கேட்டார்களோ தெரியாது” என கூறியுள்ளார்.

Exit mobile version