ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைத்து சுற்றுலா மேம்படுத்தல் செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்கான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சகல வசதிகளையும் வழங்கி அவ்வாறானவர்களை இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள ஊக்குவிக்கும் செயற்றிட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் கலாசார பாரம்பரியத்தைப் பாதிக்கும் என்று நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கையின் இயற்கை எழில் மற்றும் கலாசாரச் சின்னங்கள் என்பன சுற்றுலாப் பயணிகளை போதுமான அளவில் ஈர்க்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறும் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.