ஐ.நா பேரவையில் பேசும் வாய்ப்பை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அண்மையில் ஜெனீவாவிற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் பேசும் வாய்ப்பை இழந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுவாக ஒரு பிரச்சினையை எழுப்ப விரும்பும் ஒருவருக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுகளில் பேசுவதற்கு ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.
இதன் அடிப்படையில் தமது சகாவான ஹெக்டர் அப்புஹாமிக்கு அமர்வுகளில் 45 வது இடம் வழங்கப்பட்டது. ஆனால் நாள் முடிவில் அவர் அமர்வுகளில் பேச நேரம் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் குறித்த விவகாரத்தை விரைவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு எடுத்து செல்லவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்புஹாமி, உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் பற்றிய பிரச்சினையை எழுப்ப இருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தாங்கள் தங்கள், சொந்த பணத்தை சுற்றுப்பயணத்திற்காக செலவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
Comments are closed.