பக்தர்கள் சூழ தேரேறிய நயினாதீவு நாகபூசணி அம்மன்
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா நடைபெற்றுக்கெண்டிருக்கின்றது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் 19.06.2023 அன்று ஆரம்பமானது.
தொடர்ந்து பதினாறு நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், இன்றைய தினம்(02.07.2023) தேர்த்திருவிழா நடைபெற்றது.
இதற்கமைய தேர்திருவிழாவை கண்டுகழிக்க இன்று நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.
இருப்பினும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு போதுமான போக்குவரத்து வசதியின்மையால் மக்கள் பெரும் அளெசகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
Leave a comment