பிள்ளையானின் கடத்தலில் புதிய சர்ச்சை!

tamilni 258

பிள்ளையானின் கடத்தலில் புதிய சர்ச்சை!

பிள்ளையானால் கடத்தப்பட்ட இளைஞர்,யுவதிகள் தீவுச்சேனை பகுதிக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்டு மனித புதைக்குழிகளாக மறைக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் பகிரங்கமாக ஆதாரங்களுடன் அறிவித்தும் இதுவரை குறித்த பகுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, கடத்தப்பட்ட ரவீந்திரநாத் என்பவர் தீவுச்சேனை பகுதிக்கு கொண்டுச்செல்லப்பட்டு பின்னர் அந்த இடத்திலிருந்து இன்று வரை வெளியில் கொண்டுவரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் தற்போது புலனாய்வு அதிகாரிகளின் நடமாட்டம் குறித்த பகுதிகளில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version