புத்தளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் புத்தளம் – அனுராதபுரம் வீதியைச் சேர்ந்த 36 வயதான மரிக்கார் முஸ்வத்துல் யஹால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் புத்தளத்தில் தனது கள்ளக் கணவருடன் வசித்து வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் அவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதாக அவரது கள்ளக் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற“கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment