24 6645541831534
இலங்கைசெய்திகள்

தங்கள் உறவுகளை நினைவுகூருவதை தடுக்க சட்டத்தில் இடமில்லை

Share

தங்கள் உறவுகளை நினைவுகூருவதை தடுக்க சட்டத்தில் இடமில்லை

தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan ) ஆகிய இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார்.

மேலும், ‘‘திருகோணமலை, மூதூர் – சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள்.

அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார்.” என்றும் இந்த உரையாடல்களின்போது ஜனாதிபதியால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனோ கணேசன் எம்.பி. நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,

‘‘கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொலிஸ் கெடுபிடி, அராஜகம் குறித்து விசனத்துடன் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதை விவரமாகச் செவிமடுக்க முன்னரே, இவ்விடயம் குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தன்னுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், சம்பூரில் கைதானோரைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனுக்குத் தெரிவித்துள்ளார்.

“உயிரிழந்தவர்களுக்காக உறவுகள் நினைவேந்தல் செய்வது அந்த உறவுகள் ஒவ்வொருவரினதும் உரிமை. அதை ஏன் தடை செய்யப் பொலிஸார் முனைகின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை.” என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

“இது தொடர்பில் அரசுத் தலைவராக நீங்கள் ஒரு கொள்கை ரீதியான முடிவு எடுத்து, அதைப் பகிரங்கமாக அறிவித்துப் பொலிஸாருக்கும் நாட்டுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

அதற்கான காலம் இதுதான். ‘தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அல்லது அமைப்புடன் தொடர்பு படுத்தாமல் தங்கள் உறவுகளை நினைவேந்த அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அதை அங்கீகரிக்கின்றோம். அதைத் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது. என்ற கொள்கைப் பிரகடனத்தை நீங்கள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.” என்று ஜனாதிபதியிடம் இதன்போது மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொருவருக்கும் மறைந்த தங்கள் உறவுகளை நினைவேந்த உரிமையுண்டு என ஏற்கனவே தாம் ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனேயே ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

எனினும் அவரின் கீழே இயங்கும் பொலிஸ் கட்டமைப்பு வேறு நிகழ்ச்சி நிரலில் விடயங்களைக் கையாள்வது இப்போது நிரூபணமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...