16 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் நினைவு கூறல் நிகழ்வுகள்

4 22

கடந்த 2009ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் இன அழிப்பின் மூலம் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொத்து கொத்தாக செத்து மடிந்த உறவுகளின் நினைவு கூறல் நிகழ்வு இன்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி ஈழ விடுதலை வேண்டி மூன்று தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் முடிவுறுத்தப்பட்ட தினம், தமிழினம் எதிர்கொண்ட பேரழிவுகளின் நினைவு நாள், தமிழின அழிப்பு நாள் என்பவற்றை முன்னிறுத்தி நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்திலும், தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தொலைவில் கண்ணீர் மல்க மக்கள் வெள்ளம் அலை கண்ணீரால் நனைந்தது முள்ளிவாய்க்கால் பகுதி.

Exit mobile version