24 6647ef0a03a29
இலங்கைசெய்திகள்

தமிழீழத்தின் இறுதிப் போர் கடைசி தமிழ் மகன் உள்ளவரை ஆறாத வடுவாக காணப்படும்

Share

தமிழீழத்தின் இறுதிப் போர் கடைசி தமிழ் மகன் உள்ளவரை ஆறாத வடுவாக காணப்படும்

இறுதிப் போரிலே பல்லாயிரகணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட துன்பியல் நிகழ்வினை உலகத்தில் கடைசி தமிழ் மகன் உள்ளவரைக்கும் ஆறாத வடுவாக காணப்படும் என்பது மறைக்க முடியாத ஓர் உண்மை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா. சரவணா தெரிவித்துள்ளார்.

ஜெயா. சரவணாவால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மே மாதம் 18 ஆம் திகதி எமது உரிமை போராட்டம் மௌனிக்கப்பட்ட கரி நாளாகும். வன்னி பெரு நிலப்பரப்பான முள்ளிவாய்க்காலில் எமது போராட்டம் நிறைவு பெற்றது.

இறுதி போரிலே பல்லாயிரகணக்கான மக்கள் உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. இந்த துன்பியல் நிகழ்வினை உலகத்தில் கடைசி தமிழ் மகன் உள்ளவரைக்கும் ஆறாத வடுவாக காணப்படும் என்பது மறைக்க முடியாத ஓர் உண்மையாகும்.

இறுதிப்போர் காலத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடங்களும் மரணத்தின் ஓலங்களாகவே காணப்பட்டது. சுதந்திரத்திற்காக போராடி வீர மரணம் அடைந்த வீர மறவர்களையும் , இப்போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த அப்பாவி மக்களையும் நினைவு கூரும் புனித நாளே இந்நாள் ஆகும்.

இந்நாளிலே எமது உரிமை போராட்டத்தில் உயிர் துறந்த மக்களின் உயிர் மூச்சு இன்றும் காற்றோடு கலந்து தமது உரிமை தாகத்தோடு எம் மூச்சுக்காற்றோடு கலந்துள்ளது.

தமிழர் ஐக்கிய முன்னணி சார்பாக விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த வீர மறவர்களுக்கும், மக்களுக்கும் எமது வீர வணக்கத்தினை தெரிவித்துக் காெள்கின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...