7 23
இலங்கைசெய்திகள்

தமிழ் இனத்திற்கு ஒரு நாள் விடிவு கிடைக்கும் -அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும்! ரவிகரன் சூளுரை

Share

தமிழ் இனத்திற்கு என்றாவது ஒரு நாள் விடிவு கிடைக்கும் அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் மே -18, தமிழினத்தை அழித்த நாளாக இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

குண்டுகள் பொழிந்து பலரையும் அழித்தொழிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசாங்கத்தினுடைய இனவாதிகள் சேர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு வன்முறையை எங்களுடைய தமிழினத்தின் மேல் பாய்ச்சப்பட்ட நாளாக மே 18 இன்றைய தினம் நினைவு கூரப்படுகின்றது.

இந்நாளுக்கு யாராவது பதில் கூறியே ஆகவேண்டும். பல நாடுகள் இணைந்து எம் இனத்தை அழித்ததாக சொல்கின்றார்கள். அந்த பல நாடுகளும் பதில் சொல்லியேதான் ஆகவேண்டும்.

நிச்சயமாக தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும். அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும்.

எம் மக்களுடைய ஆத்மா சாந்தியடைய மக்கள் கூடி அனுஷ்டிக்கின்றார்கள் என்றால் அந்த மக்களின் வேதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே மே 18 நாளுக்குரிய தீர்வினை இலங்கை அரசாங்கமும், சர்வதேச நாடுகளும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...