tamilni 46 scaled
இலங்கைசெய்திகள்

சுமந்திரனைப் போல வேறொருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை!

Share

சுமந்திரனைப் போல வேறொருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை!

நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 2020.10.20 ஆம் திகதி நாடாளுமன்ற உரை ஊடாக நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். உயர்நீதிமன்றம் பயனற்றது,உயர்நீதிமன்றத்தில் உள்ளவர்கள் வீடு செல்ல வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நவாஸ் கட்டளைப் பிறப்பித்ததாக இவர் (சுமந்திரன்) குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற சிறப்புரிமை ஊடாக நீதிமன்றத்தை மலினப்படுத்தினார். இவரை போன்று எவரும் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சிக்கவில்லை. இன்று நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கிறார்.

எம்.ஏ.சுமந்திரனை போன்று நீதிமன்ற கட்டமைப்பை பிறிதொருவர் விமர்சிக்கவில்லை. பிறிதொருவர் விமர்சித்திருந்தால் இன்று அந்த நபர் கடூழிய சிறைதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். இவரே (சுமந்திரனை நோக்கி) நீதிமன்றத்தை மலினப்படுத்தினார் என்று சாடினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் நான் குறிப்பிட்ட விடயத்துக்கு பொருத்தமற்ற வகையில் நீதியமைச்சர் உரையாற்றுகிறார். முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் நீதியமைச்சர் முறையாக பதிலளிக்கவில்லை.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...