rtjy 318 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை

Share

நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை

தற்போது பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சட்டத்தரணிகள் கூட்டிணைவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் ‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தல் விவகாரம் போன்றவற்றில் மிகமுக்கிய தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, உயிரச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக குறிப்பிட்டுப் பதவியை துறந்து நாட்டைவிட்டும் வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் அவரைத் தொடர்புகொள்ள முற்பட்டும், அது சாத்தியமாகவில்லை.

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதம் மற்றும் அவர் கூறியதாக சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...