கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நீதிமன்றினால் பிணையில் விடுவிப்பு!

images 7 6

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இன்று (24) கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றத்தினால் மீண்டும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே பிணையில் இருந்த அர்ச்சுனா, நேற்று (23) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகக் கோட்டை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணைக்கு இணங்க இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், அவரை மீண்டும் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா, சபையில் தனது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version