25 6909c0c4a949f
இலங்கைஅரசியல்செய்திகள்

பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்கள் குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தல்!

Share

பெண்களை வர்ணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும் நடந்துகொண்டால், அவர்களை உடனே பதவியில் இருந்து நீக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை ‘அழகானவர்கள்’ உள்ளிட்ட சொற்களைக் கொண்டு வர்ணிக்கும் அமைச்சர்களை வைத்துக்கொண்டு எவ்வாறு கல்வியை முறையாக முன்னெடுக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஆகவே, இது குறித்து ஜனாதிபதியும் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதால், ஆங்கிலத்தில் பேச முடியாதவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இல்லையேல், ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு வந்து உரையாற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...