உரையாற்ற முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முயற்சிக்கு சபாநாயகர், சபை முதல்வர் தடை!

25 68d5b0b79586f

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிமுறைகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று (நவம்பர் 12) உரையாற்ற முயற்சித்த போதும், அதனை ஆளும் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிமுறைகளுக்கு மாறாக அர்ச்சுனா இராமநாதனின் முயற்சி அமைந்ததாகக் கூறியே, அவரது உரையைச் சபாநாயகரும், சபை முதல்வரும் நிறுத்தினர்.

சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிகள் குறித்துச் சபையில் தெளிவுபடுத்தல்களை வழங்கினார்.

நிலையியற் கட்டளைகளைப் பின்பற்றுவது தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

Exit mobile version