யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக குறித்த பெண் தலை வலியினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் சிரேஸ்குமார் ஞானசீலீ 37 வயது என்ற மூன்று பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
#SrilankaNews
Leave a comment