10 28
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் குழந்தையை காப்பாற்றுவதற்காக உயிர் விட்ட இளம் தாய்

Share

தென்னிலங்கையில் குழந்தையை காப்பாற்றுவதற்காக உயிர் விட்ட இளம் தாய்

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர பிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக தாய் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

மின்சார இணைப்பிற்குள் ஆணியை பொருத்திய தனது இரண்டரை வயது குழந்தையை காப்பாற்ற முற்பட்ட தாயே உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் லுனுகம்வெஹர பிரதேசத்தில் வசித்த 28 வயதுடைய சந்தமாலி ஜயதிலக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

வீட்டின் வரவேற்பறையில் ஜன்னல் துணியை பொருத்துவதற்காக ஆணியை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவரது குழந்தை ஆணியை எடுத்து வீட்டின் வரவேற்பறையில் உள்ள மின் இணைப்பில் செருகியுள்ளது.

 

இதைப் பார்த்த மூத்த பிள்ளை கத்தி கூச்சலிட்டது. உடனடியாக தாயாரும் அலறியடித்தபடி சிறு குழந்தையின் அருகில் சென்று குழந்தையை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

 

பிளக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆணியை அகற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

 

மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே விழுந்து கிடந்ததால், தாயை காப்பாற்றுமாறு இரண்டு பிள்ளைகளும் கூச்சலிட்டனர்.

 

பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்களும் வீட்டிற்கு வந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய பெண் லுனுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

குறித்த பெண்ணின் கணவர் கொழும்பில் பணிபுரிவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...