கோர விபத்தில் தாய், மகள் ஸ்தலத்தில் பலி – ஆபத்தான நிலையில் குழந்தை

18 4

கோர விபத்தில் தாய், மகள் ஸ்தலத்தில் பலி – ஆபத்தான நிலையில் குழந்தை

அனுராதபுரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எப்பாவல – கெக்கிராவ பகுதியிலுள்ள வளைவுக்கு அருகில் பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 3 வயதுடைய குழந்தை படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 38 வயதுடைய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனின் சாரதி தூங்கியதால் வேன் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக எப்பாவல வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Exit mobile version