கோர விபத்து : தாயும் மகளும் பரிதாபமாக பலி

tamilni 78

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹாதெக்ம பகுதியில் லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் தாயும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வானில் பயணித்த தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் அம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணும் அவரது 31 வயது மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version