கடந்த 29 நாட்களில் மட்டும் இலங்கைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 101,192 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஒரே மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தது இதுவே முதல் முறையாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இவ்வருடம் (2022) இதுவரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 80 ஆயிரத்து 26 ஆகும்.
இதேவேளை, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடு இந்தியாவாகும். அந்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 231 ஆகும்.
#SriLankaNews