இனம்தெரியாத நோயினால் பாதிக்கப்படும் குரங்குகள்! மனிதர்களுக்கு பரவும் ஆபத்து

9

பொலன்னறுவைப் பிரதேசத்தில் குரங்குகள் மற்றும் மந்திகள் இனம்தெரியாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நோய் மனிதர்களுக்கு தொற்றும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மற்றும் கிரிதலே பிரதேசங்களில் காணப்படும் குரங்குகள் மற்றும் மந்திகளிடையே இனம்தெரியாத நோய்த்தொற்று ஒன்று பரவிக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

குறித்த நோயானது பொலன்னறுவைப் பிரதேச பொதுமக்களுக்கும் தொற்றும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் நோயின் தாக்கம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நோய்த்தொற்றுக்கு உள்ளான குரங்குகள் மற்றும் மந்திகளைப் பரிசோதித்து நோய்த்தொற்றினை இனம்கண்டு அதனைக் கட்டுப்படுத்த தற்போதைக்கு நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version