இலங்கைசெய்திகள்

சிறீதரனை விட தேரருக்கு உணவளித்த விடுதலை புலிகள் சிறந்தவர்கள்! தேரர்

Share
1 17
Share

சிறீதரனை விட தேரருக்கு உணவளித்த விடுதலை புலிகள் சிறந்தவர்கள்! தேரர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள “லும்பினி” விகாரையில் தலைமை தேரருக்கு உணவு வழங்கப்பட்டதாக ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

தையிட்டி விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும்,

ஐயா! என்னை பொறுத்தவரையில், உங்களை விட தனது இனத்துக்காக 30 ஆண்டுகள் போராடியவர்கள் சிறந்தவர்கள். அந்த ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள “லும்பினி” விகாரையில் தலைமை தேரருக்கு உணவு வழங்கப்பட்டது.

பௌத்தத்தின் படி திருடுவது கடுமையான பாவம். ஏமாற்றுவதும் பாவம். இந்த விகாரை அப்படி உருவாக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், தையிட்டில் விகாரை உங்களுக்கு இடிக்கவேண்டும் என்றால் இடிக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால், நாங்கள் நாட்டில் எந்த இடத்தில் உள்ள எந்த ஒரு கோவிலையும் இடிக்கப் போவதில்லை.

நாங்கள் பெளத்தர்கள். புத்தர் அருளிய போதனைகளை பின்பற்றியவர்கள் நாங்கள். எங்களுக்கு உண்மையான பெளத்தர்களாக வாழ வேணுமென்றால் முதலில் தன்னுடைய மகிழ்ச்சியை விட மற்றவரின் சந்தோசத்தை பற்றி சிந்திக்க வேண்டும்.

ஐயா! நீங்கள் ஒருநாள் எங்கள் விகாரைக்கு வாருங்கள். புத்தர் வணங்க மட்டுமல்ல புத்தர் சிலைக்கு இரு பக்கத்தில் உள்ள இந்து கடவுளான முருகன் மற்றும் விஷ்னு, கண்ணகி (பத்தினி) ஆகிய கடவுள்களை வணங்கலாம் பூஜையும் செய்யலாம். ஒருநாள் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

சிவ + ஞானம் எனும் உங்கள் பெயரின் அர்த்தம் சிவபெருமானின் ஞானம் மற்றும் அறிவை கொண்டவர் என்பதாகும்.

உங்களுக்கு சிவபெருமானின் ஞானத்தில் ஒரு துளியும் நாட்டில் மக்களுக்காக சேவை செய்வதற்கு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...