1 53
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவு : அம்பலப்படுத்திய பிரதமர்

Share

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவு : அம்பலப்படுத்திய பிரதமர்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று (27.02.2025) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) 2010 முதல் 2014 வரை – 3,572 மில்லியன்

மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) – 2015 முதல் 2019 வரை 384 மில்லியன்

கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) – 2020 முதல் 2022 வரை 126 மில்லியன்

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) – 2023 மற்றும் 2024 க்கு இடையில் 533 மில்லியன் என தெரிவித்துள்ளார்

மேலும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன் பயன்படுத்தியதாகவும்  2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் 2013 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்டது எனவும் இது ரூ. 1,144 மில்லியன் என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...