யாழில் இளைஞர் – யுவதிகளை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி

24 669b9e2b2c6ba

யாழில் இளைஞர் – யுவதிகளை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி

யாழ்பாணத்தில் இளைஞர், யுவதிகளை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, சுமார் ஆறு கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணினால் கோடிக்கணக்கான பணம், பல்கலைக்கழக அலுவலரின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version