மத்திய வங்கியில் மாயமான பெருந்தொகை பணம் தொடர்பில் தகவல்

tamilnaadi 128

மத்திய வங்கியில் மாயமான பெருந்தொகை பணம் தொடர்பில் தகவல்

மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து ஐம்பது இலட்சம் ரூபா காணாமல்போனமை தொடர்பில் விசாரணை செய்யும் இரகசிய பொலிஸ் புலனாய்வுக்குழுக்கள் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தகவலையும் கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், காணாமல்போன பணம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து இந்த பணம் காணாமல்போய் பல மாதங்கள் ஆகிய நிலையில் எந்தவொரு தகவலையும் கண்டறிய முடியவில்லை என கூறப்படுகின்றது.

நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள மத்திய வங்கி கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள மூன்றாவது மாடியில் உள்ள அலமாரியில் இருந்து இந்த பணம் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோட்டை பொலிஸ் பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று உடனடியாக முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், 23 அதிகாரிகளிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version