கனடாவிற்கு அனுப்புவதாக மட்டக்களப்பில் பணமோசடி

rtjy 147

கனடாவிற்கு அனுப்புவதாக மட்டக்களப்பில் பணமோசடி

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுப்பட்ட ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியை சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களிற்கு முன்னர் பளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளம் ஊடாக வந்த விளம்பரம் ஒன்றில் அறிமுகமாகி கனடாவிற்கு செல்வதற்காக பத்து இலட்சம் ரூபாவினை குறித்த நபருக்கு வைப்பிலிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கனடாவிற்கு அனுப்புவதாக குறித்த நபர் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்த நிலையில், அவர் கொடிகாமம் பொலிஸ் ஊடாக யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட யாழ்.மாவட்ட விசேட குற்றவிசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினர் காத்தான் குடியைச் சேர்ந்த சந்தேகநபரை கைது செய்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவானிடம் முற்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version