rtjy 36 scaled
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரோலியா அனுப்புவதாக பண மோசடி

Share

அவுஸ்திரோலியா அனுப்புவதாக பண மோசடி

அவுஸ்திரோலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி பணமோசடி செய்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு ரகதாலருக்கு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (02.10.2023)உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை ஓசில் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனான போலி வெளிநாட்டு முகவர், மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை வேலை வாய்ப்பு விசா மூலம் அவுஸ்திரோலியாவிற்கு அனுப்புவதாக போலி அவுஸ்திரோலியா விசாவை வழங்கி அவரிடமிருந்து 90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடியாக பெற்றுள்ளார்.

இதனையடுத்து அந்த விசாவில் இலங்கையில் இருந்து பயணிக்க முடியாது, இந்தியா சென்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாக இந்தியாவுக்கு விமான மூலம் அனுப்பி வைத்த நிலையில் இந்தியா சென்ற குறித்த நபர் அங்கிருந்து அவுஸ்ரேலியாவிற்கு விமான மூலம் செல்வதற்காக முயற்சித்த போது அந்த விசா போலியானது என தெரியவந்துள்ளதாக முறைப்பாட்டாளர் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போதுபோலி முகவருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸாரிடம் பாதிக்கப்பட்டவர் செய்த முறைப்பாட்டையடுத்து போலி முகவரை திருகோணமலையில் வைத்து மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...