இலங்கையில் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு

Share

இலங்கையில் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு

இலங்கையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வரவுள்ள புதிய கட்டுப்பாடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கையடக்கத் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வர்த்தக விளம்பர குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் வழங்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான விதிகளை தயாரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது.

தயாரிக்கப்பட்ட குறித்த தொடர் வழிகாட்டுதல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து கைத்தொலைபேசி பாவனையாளர்களின் தனியுரிமை மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக வரும் குறுஞ்செய்திகள் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிறுவனங்கள் செயல்படாததால், அதை சட்டமாக வர்த்தமானியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, விற்பனையாளர் விளம்பர உரைச் செய்தியை அனுப்புவதற்கு பெறுநரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...