நிவாரணம் வழங்குவதாகக் கூறும் மோசடிக்காரர்களிடம் அவதானமாக இருங்கள் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரிக்கை!

MediaFile 2 4

‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களைச் (Personal Information) சில மோசடிக்காரர்கள் பெறும் சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன.

பேரிடருக்குப் பின்னரான நிவாரணச் செயற்பாடுகளுக்கான தகவல் சேகரிப்பானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம சேவகர்களுடன் இணைந்து, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக மாத்திரமே இடம்பெறுவதாக அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், தமது தனிப்பட்ட தகவல்களை மோசடிக்காரர்களிடம் பகிர்வதைத் தவிர்க்குமாறும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது

Exit mobile version