கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் அறிவித்தால், போக்குவரத்து அமைச்சு அதற்கு இணங்க வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டால், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் தடுப்பூசி அட்டையை சரிபார்க்க போக்குவரத்து அமைச்சு உத்தரவு பிறப்பிக்கும் என்றார்.
தொற்றுநோய் தொடர்பான முடிவுகளை சுகாதார அமைச்சு எடுக்க வேண்டும் என்றும், போக்குவரத்து அமைச்சு அதற்கு இணங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment