25 68469585f0785
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

யாழ்ப்பாணம், செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு குறித்து அரசு விசேட கரிசனை கொண்டுள்ளது. இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 19 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக அரச தரப்பின் நிலைப்பாடு குறித்து வினவியபோதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சியின் போது கண்டறியப்படும் அனைத்து மனித எச்சங்களும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.

அதன்பின்னர் பகுப்பாய்வு அறிக்கைகளின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூற முடியும்.

நீதிமன்றத்தின் அனுமதியில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அது குறித்து வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஆகவே, நீதிமன்றம்தான் இறுதியான முடிவை எடுக்கும்.

எவ்வாறாயினும் உண்மைகள் கண்டறியப்படுவதற்காகத் தொடர்ச்சியான அகழ்வுப் பணிகளுக்காக நிதி வழங்கல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அரச தரப்பில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதோடு விசேட கரிசனைகளையும் கொண்டிருக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....