17
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

உப்பு இறக்குமதி செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சினாலோ அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களினாலோ எவ்வித இடையூறுகளும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பதில் பணிப்பாளர் நாயகம் ரீ.பி. ஆனந்த ஜயலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உப்பு இறக்குமதி செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களினால் பல்வேறு இடையூறுகள் விளைவிக்கப்படுவதாக போலிச் செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான எவ்வித இடையூறுகளோ அல்லது தடைகளோ உப்பு இறக்குமதி செய்வதற்கு கிடையாது என அறிவித்துள்ளார்.

மேலும் உப்பு இறக்குமதி செய்வதற்காக கடந்த 22ம் திகதி வரையில் 117 பேர் விண்ணப்பித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 150000 மெற்றிக் தொன் உப்பு இறக:குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உப்பு துறைமுகத்தை அடைந்ததன் பின்னர் அவற்றை வேகமாக விடுவிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் ஜூன் 30 முதல் தண்ணீர்க் கட்டணத் திருத்தம்: அமைச்சர் சுசில் ரணசிங்க தகவல்

இலங்கையில் தண்ணீர்க் கட்டணங்களின் அடுத்தக்கட்ட திருத்தம் வரும் ஜூன் மாதம் 30-ம் திகதி மேற்கொள்ளப்படும் என...

world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...