உக்ரைனில் போர்க்கால சூழல் நிலவும் நிலையில் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உக்ரேனில் வாழும் இலங்கையர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு 42 இலங்கையர்கள் வாழ்கின்றனர். அவர்களில் எழுவர் மாணவர்கள் ஆவர்.
அத்துடன், உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி, வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை தூதரகமொன்று உக்ரேனில் இல்லாத நிலையில், துருக்கியிலுள்ள தூதரகத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக உக்ரேனில் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், அங்குள்ள இலங்கையர்களை துரித கதியில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.
#SrilankaNews