கல்வி அமைச்சின் அறிவிப்பு

24 6630380ea0c44

கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை மாணவர்களை இடைநிலை தரங்களுக்கு இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இனிவரும் காலங்களில் விளையாட்டு திறன்களின் அடிப்படையில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதிக்காது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனுடன் சம்மந்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேலும் இது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அமைச்சு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version