இலங்கைசெய்திகள்

ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்

Share

ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் ஆயுதப்படை உறுப்பினர்கள் சிக்கக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன (Kamal Gunawardena) அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 30 ஆண்டுகளாக நம் நாட்டில் நடந்து வந்த கொடூரமான போரை தோற்கடிக்க தங்கள் உயிரை தியாகம் செய்த ஏராளமான ஆயுதப்படை வீரர்கள், ஒரு குழுவின் மனித கடத்தலின் விளைவாக சட்டவிரோதமாக ரஷ்ய – உக்ரைன் போர் முனைக்கு சென்றனர்.

இந்த போர் முனைகளில் பணிபுரியும் போது கணிசமான எண்ணிக்கையான எமது போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலுமொரு பகுதியினர் காயமடைந்துள்ளதாகவும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் முப்படைகளிலும் கௌரவமாக சேவையாற்றி ஓய்வு பெற்ற இவ்வாறான போர்வீரர்கள் வெளிநாட்டில் கூலிப்படையாக செயற்படுவது வருத்தமளிக்கிறது.

வெளிநாட்டு இராணுவத்தில் சேர்ப்போம், பெரும் சம்பளம் கொடுப்போம், குடியுரிமை மற்றும் பெரும் சலுகைகள் பெறுவோம் என்று கடத்தல்காரர்கள் கொடுத்த பொய் வாக்குறுதியின்படி போர் வீரர்கள் ரஷ்ய – உக்ரைன் போர்முனைக்கு கூலிப்படையாக அனுப்பப்பட்டனர், ஆனால் அவர்களுக்கு சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை.

இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்த கடத்தல்காரர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...

download
உலகம்செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்: முக்கிய எரிசக்தி மையங்கள் அழிவு – குளிர்காலத்தில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு!

உக்ரைனின் முக்கிய எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களின் விளைவாக, அந்நாட்டின் பல...