திறந்து 12 மணித்தியாலங்களில் மில்லியனில் வருமானமா?

Mirigama Kurunegala Central Expressway Will be Open on January 15 1 Small

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு முதல் 12 மணிநேரத்தில் ரூ. 28 லட்சம் ரூபா வருமானம் கிடைத்ததாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான அதிவேக நெடுஞ்சாலையில் முதல் 12 மணித்தியாலங்களில் 13,583 வாகனங்கள் பயணித்துள்ளதுடன் விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.

சனிக்கிழமை (15) நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை மீரிகமவிலிருந்து குருநாகல் வரை கெட்டுவான நுழைவாயில் வரையிலும், கெட்டுவானவிலிருந்து மீரிகம வரையிலும் பொதுமக்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

#LocalNews

 

Exit mobile version