26 3
இலங்கைசெய்திகள்

வறுமையில் இருந்து செல்வந்தர்: கோடீஸ்வரரான இலங்கையின் துப்புரவு தொழிலாளி

Share

வறுமையில் இருந்து செல்வந்தர்: கோடீஸ்வரரான இலங்கையின் துப்புரவு தொழிலாளி

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் இலங்கையில் பிறந்த வினுல் கருணாரத்ன துப்புரவுத் தொழில் செய்து கோடீஸ்வரராகியுள்ளார்.

இதனை அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று, ”இது ஒரு உண்மையான வறுமையில் இருந்து செல்வந்தரின் கதை” (“ராக்ஸ் டு ரிச்சஸ் ஸ்டோரி” (rags to riches story) என்று குறிப்பிட்டுள்ளது.

25 வயதான கருணாரத்ன தனது பகுதிநேர வேலையை முழு நேர வேலையாக மாற்றிக்கொண்டதாக செய்திச்சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் வினுல் கருணாரத்ன தனது கனவு கார் மற்றும் இலங்கையில் உள்ள தனது பெற்றோருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் அளவுக்கு சம்பாதித்துள்ளார்.

“நீங்கள் எவ்வளவு வேகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு வேலைகளைச் செய்து முடிக்க முடியும், மேலும் அதிகப் பணம் சம்பாதிக்க முடியும்” என்று அவர் தமது நேர்காணல் செய்த தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.

இதேவேளை இணைய மற்றும் கையடக்கபேசி சந்தையை வழங்கும் அவுஸ்திரேலிய நிறுவனமான Airtasker இன் தரப்பட்டியலின்படி, சிறந்த 10 வருமானம் ஈட்டுபவரில் கருணாரத்னவும் உள்ளடங்கியுள்ளார்

ஏர்டாஸ்கர் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ஃபங் இது தொடர்பில் கூறும்போது, கடினமாக உழைப்பதன் மூலம் எவரும் தீவிரமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...