2 1 19
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் படையினரின் கட்டுப்பாட்டில் 36 வீத காணிகள் – சிவஞானம் சிறீதரன்

Share

கிளிநொச்சியில் படையினரின் கட்டுப்பாட்டில் 36 வீத காணிகள் – சிவஞானம் சிறீதரன்

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் நகரத் திட்டமிடலுக்குரிய காணிகளில் 36 வீதமானவை போர் முடிவுற்ற 14 ஆண்டுகளின் பின்னரும் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமல் உள்ளதனால் மாவட்டத்தின் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi ) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (26.12.2024) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) இதனைச் சுட்டிக் காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “கிளிநொச்சி மாவட்ட செயலகவளகம் கலாசார மண்டபம் அமைக்கப்பட்டிருந்த காணி கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பயன்பாட்டுக்கு உகந்த சந்திரன் பூங்கா இருந்த காணி உள்ளிட்ட நகர்ப்புறக் காணிகள் பலவற்றை இன்றளவும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை நகரின் முதன்மைப் பாடசாலைகளுள் ஒன்றான கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் மைதானத்திற்கான பாதையை விடுவிக்குமாறு கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட சமநேரத்தில் கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

441 ஏக்கர் விஸ்தீரணம் உடைய வட்டக்கச்சி அரசினர் விவசாய பண்ணையின் 410 ஏக்கர் காணி தற்போது வரையில் இராணுவத்தின் வசமுள்ளது.

இதனை விவசாயத் திணைக்களத்திடம் கையளிக்கும் பட்சத்தில் இந்த மாவட்டத்தின் நூற்றுக்கணக்கானோருக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதால் பொதுப்பயன்பாட்டுத் தேவைகளுக்குரிய காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கும் வகையில் அமைவிடத்தைக் கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுப்பயன்பாட்டு நிறுவனங்களை அண்மித்தும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைகளை மூடுவதென்ற தீர்மானத்தை நிறைவேற்றி அதன் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...