7 9
இலங்கைசெய்திகள்

மகிந்த ஆரம்பித்த மிஹின் லங்கா விமான சேவை : வெளியான தகவல்கள்

Share

மகிந்த ஆரம்பித்த மிஹின் லங்கா விமான சேவை : வெளியான தகவல்கள்

2007ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான மிஹின் லங்கா தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிறுவனம் பாரிய நட்டத்தை சந்தித்ததுடன், பொது நிதியும் வீணடிக்கப்பட்டது. இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு விமான நிறுவனம் தனது செயற்பாடுகளை முடித்துக்கொண்ட போதும், செயற்பாட்டை முடிவுறுத்தும் செயன்முறை இன்னும் முழுமையடையாமல் உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம் இரண்டு அரசு வங்கிகள், குறித்த நிறுவனத்துக்கு வழங்கிய பில்லியன் கணக்கான ரூபாய் கடன்களை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2024 ஒக்டோபர் வரவு செலவு அறிக்கையின்படி, மிஹின் லங்கா இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு தலா 3.17 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும்.

பகுதி வட்டி செலுத்தப்பட்டாலும், அசல் தொகை இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது.

ரூபாய் கடன்களுக்கு மேலதிகமாக மிஹின் லங்கா நிறுவனம், அமெரிக்க டொலரில் கடனை பெற்றிருந்தமையால், அது கடனை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...